என்னுள்ளவள்

கடை விழிப் பார்வையில்
கவிதை சொன்னால் ..
கண்களை சிமிட்டி
கர்வம் தொலைத்த்தால்..

புன்னகைப் பூவால்
புது மலர் மலர..
தேனிசை குரலில்
செந்தமிழ் திளைக்க..
பேசிய வார்த்தையில்
வான்வெளி துளிர்த்தது...

மெல்லிய இடையின் இலக்கணமே
உன் அழகினில் தொலைந்தேன் இக்கணமே..

உன் பாதச்சுவடுகள் வழியாக
புது பாதையும் தொடருது துணையாக...
உந்தன் பின்னே வந்தாலே
எந்தன் ஜென்மம் முடியாதே...

கைகளை கட்டி கடலினுள் தள்ளியும்
வானத்தை தொடுகிறான் உன்னாலே..

உன்னை அடையும் ஆண்மகனும்
கர்ப்பம் தரித்துத் தாயாவான்..

உந்தன் அருகில் இருந்தாலே
எதுவும் சாத்தியம் தன்னாலே..

எழுதியவர் : குணா (19-Aug-18, 8:13 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 641

மேலே