ஸ்ரீ வான மகள்

அவள் குளித்த சோப்பு நுரைகள் வானவில் வண்ணம் என்பேன்
அவள் குளித்த நீர் துளிகள் பூமிக்கு மழைதுளி என்பேன்
அவள் பார்க்கும் கண்ணாடி வெண்ணிலா என்பேன்
அவள் ஓட்டும் பொட்டு விண்மீன் என்பேன்
அவள் அணிந்த தங்க ஆபரணங்கள் சூரியன் என்பேன்
அவள் அணிந்த மூக்குத்தி விடிவெள்ளி என்பேன்
அவள் ஆடை மேகம் என்பேன்
ஆடை களைய மோகம் கொள்வேன்
செம் மேகம் போர்த்தி ஊடல் கொள்வேன்

ஸ்ரீ வான மகள்

எழுதியவர் : ராஜேஷ் (19-Aug-18, 7:54 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 77

மேலே