அறிவியல் அறிஞன் காதலை விளக்கியிருந்தால்

காதல் தோற்றம் இதயம் அல்ல!!
மூளைதான்!!!
காதலை உண்டாக்கியது கடவுள் அல்ல!!
மூளையின் ஹார்மோன்கள் தான்!!!
காதல் புரியாத புதிர் அல்ல!!
புரிந்துகொள்ளவேண்டிய ஹார்மோன் செயல்பாடு தான் !!!
காதலின் தொடக்கம் காமம் தான்
இதுதான் டெஸ்ட்ரோஜனின் நியதி !!!
மூன்று நிலைகளில் காதல் உண்டு
அதில் மூன்றாம் நிலையிலே, புரிதலான காதல் உண்டு!!!
ஒரு முறை வருவதே உண்மைக்காதல் இதுவே நம்நியதி
உண்மைக்காதல் வரும் வரை எத்தனை முறையும் காதல் வரலாம் இதுவே அறிவியல் நியதி!!!
உண்மைக்காதல் என்பது உங்களது மூன்று நிலையிலான ஹார்மோன் செயல்பாடுகள் எதிர்பாலினருடன் ஒத்து போவது!!!
கவிதை என்பது கவி உணர்வுடன் விழிப்புணர்வையும் தூண்ட வேண்டும்!!!

எழுதியவர் : செல்லப்பாண்டி (19-Aug-18, 7:52 pm)
சேர்த்தது : Chellapandi
Tanglish : kathalin pirappidam
பார்வை : 267

மேலே