பகட்டுத்தனம்

அதிகாரம் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்க
அடக்குமுறையின் கைகள் ஓங்கி அடிக்க
பணபலம் பாதாளம் வரை பாய
உழைப்பவனின் கால்கள்
ஊனமுற்றுதான் கிடக்கும்
பாடையில் போகும் போதும்
மாற்று ஆடைக்கும் வழியில்லாமல் ...

எழுதியவர் : வருண் மகிழன் (26-Jun-19, 5:08 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 101

மேலே