சில நேரங்களில்

தொட்டியில்
இருந்த மீன்
நெகிழிப்பையில்
அடைபட்டிருந்த
மீனைப்பார்த்து
பரிதாபப்பட்டது ..
கடல் மீன்கள்
இதன் நினைவில்
வரவில்லையோ ஏனோ?

எழுதியவர் : வருண் மகிழன் (28-May-19, 3:24 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : sila nerangalil
பார்வை : 242

மேலே