பரம்பொருளே
இறைவா
உன் படைப்பினில்
பேதமில்லையெனில்
"தீண்டாமை" இன்னும்
இருப்பது ஏனோ?
உன் படைப்பில்
"தீண்டாமை" இருப்பின்
நீ யார் ?
உன் படைப்புகள்
பொதுவானவை என்றால்
"ஊனம் " ஏன் இன்றும் இருக்கிறது ?
"ஊனம் " இருப்பின்
அது உனக்கும் உண்டோ ?
ஏகாதிபத்தியக்காரர்களின்
குளிரூட்டப்பட்ட தனி அறையில் தான்
நீ இருக்கிறாய் என்றால்
சுப்பனுக்கும் குப்பனுக்கும்
குலதெய்வம் எதற்கு ?
பதில் சொல்வாயாக
எம் பரம்பொருளே !
இப்பாமர மக்களுக்கு ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
