முடிந்தால் கரம் கொடுப்போம்
' ஏன்டா ஏதாவது ஒரு வேலைக்கு போகக் கூடாதா இப்படியே சுத்திகிட்டே இருக்கியே என மரகதம் முணுமுணுத்து கொண்டிருந்தாள், இதை கேட்டுக் கொண்டிருந்த ராம், நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன் ம்ம்.. வேலை தான் கிடைக்க மாட்டேனுது.. என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
அம்மா' நான் வெளியே போய்ட்டு வரேன் என கிளம்பியவனை மரகதம் தடுத்தாள், இருடா காலையில வெறும் வயத்துல வெளியே போகக்கூடாது ன்னு ஒரு டம்ளர் பால் கொடுத்தாள்.
ராம் நேராக தன் நண்பன் வினோத் வீட்டிற்கு சென்றான். வாடா உன்னதான் எதிர்பார்த்திட்டு இருக்கேன் என்றான் வினோத். என்னடா விஷயம் , நேத்து ஒரு ஐடியா தோனுச்சு அதான் ஒன்கிட்ட share பண்ணலாம்னு ' என்றான் வினோத்.
ம்ம்.. சொல்லுடா அப்படி என்ன புதுசுன்னு பாக்கலாம்.. நான் சொல்லுவன் ஆனால் நீ திட்டக் கூடாது. நான் ஏன்டா, நீ வேற... ம்.. சொல்லு, நாம் ஏன் ஒரு மளிகை கடை வைக்க கூடாது ? என்றான் வினோத்..
வெக்கலாம் ஆனால்.. அம்மா திட்டுவாங்க... என்னடா M.A. படிச்சுட்டு ஏன் இந்த வேலை ன்னு.. அதான் யோசிக்கிறேன்...
நான் ஒன்னு சொல்லவா.. எங்க மாமா என்ஜினீயரிங் படிச்சாரு வேலை கிடைக்கல
இந்த பூ... காய்கறி.. இதெல்லாம் எக்ஸ்போர்ட் பண்றாரு.
சரிடா என்ற ராம்..அம்மாவிடம் அனுமதி பெற்று அவன் பங்கிற்கான பணத்தை ஏற்பாடு செய்தான். ராம்.. வினோத்.. இருவரும் சேர்ந்து மளிகை கடை ஆரம்பித்தார்கள். ஓரிரு மாதங்கள் கடந்தது
போட்ட சரக்கு அப்படியே இருந்தது நாலய்ந்து
விற்றன. இருவருக்குள்ளும் மனதுக்குள் ஒரு நெருடல் தெரியாத்தனமா இதுல கால வெச்சிட்டோமா.. என்றிருந்தது
இப்படியே காலம் போய் கொண்டிருந்தது...
ஒரு நாள் சீனாவில் பரவி கொண்டிருந்த நுண்கிருமி நோய் தொற்று covid19 பரவுதுன்னு அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டது. யாரும் வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்கும் என்று நியூஸ் சானலில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. மரகதம்... என்னடா இருந்திருந்து இப்பதான் கடை ஆரம்பிச்சிஙக.. என்று அலுத்து கொண்டாள்.வினோத்திடம் இருந்து ஃபோன் கால்... ஏய் ராம் டீவி பார்த்தியா
144 போட்டிருக்காங்க..
காலை 6ல் ..ருந்து மதியம் 1 மணி வரை தான். கடை வைக்கலாம்.. ம்மா.. இருவருக்கும் வருத்தம். இருந்தாலும் அதுல ஒரு சந்தோஷம்.. எப்படியும் எல்லாப் பொருட்களையும் வித்திருலாம் என்று..
மறுநாள் காலை கடை திறந்ததும் வழக்கமான வியாபாரம் மட்டுமே, எதிர்பார்த்தது போல் இல்லை.. இவ்வாறாக இரண்டு நாட்கள் போனது.. மரகதம்.. டேய் ராம் நம்ம பக்கத்து வீட்டு லீலாவுக்கு கொஞ்சம் மளிகை சாமான் கொடுடா, அவங்க அன்றாடம் சம்பாதித்து சாப்பிட்றவங்க.. இல்லன்னு ஒருத்தர்கிட்ட கை நீட்ட மாட்டாங்க.. ரொம்ப கெளரவமா
இருக்கிறவங்க.. என்றாள்.
ராம்ற்கு ஒரு யோசனை தோன்றியது. வினோத்திடம் முதல்ல கேட்டுக்கலாம் என்று ஃபோன் செய்து யோசனையை தெரிவித்தான் . வினோத்தும் சரி என்றதும் , தன்னுடைய ஸ்மார்ட் போனை எடுத்து வாட்ஸ் ஆப்பில் டைப் செய்தான்.
" தங்களுக்கு வேண்டிய மளிகை பொருட்கள் லிஸ்ட்டை இந்த நம்பருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினால்
தங்கள் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும்"
பின்குறிப்பு: பணம் இல்லை என்ற கவலை வேண்டாம். இருக்கும் போது கொடுத்தால்
போதும்.
இந்த தகவலானது அப்பகுதி முழுவதும் பரவியது
சில நாட்களில் கடை சரக்கு தீர்ந்தது மக்களின் பசியும் கூடவே.
● பசுபதி தங்கசாமி