அந்தக் கொர்ரு கொர்ர நிறுத்துடா

டேய் முருகப்பா, இங்க வாடா.
@@@@@
என்னங்க பாட்டிம்மா.
@@@@@@@
அந்தக் கொர்ரு கொர்ர நிறுத்துடா.
@@@@@@@
பாட்டி, அதை நிறுத்துனும்னா அப்பாவோட மூக்கையும் வாயையும் தலகாணி வச்சு அமுக்கணும். அப்பறம் என்ன ஆகும் தெரியுமா? நாம ரண்டு பேரும் கம்பி எண்ணவேண்டி இருக்கும்.
@@@@@@@
அட நாசமாப் போனவனே. கொறட்டை நம்ம குடும்பத்தில பரம்பரையாக இருக்கிற பழக்கம்டா. எம் மவனோட கொறட்டையவா நிறுத்தச் சொன்னேன்.
@@@@@@@
பின்ன எந்தக் கொர்ரு கொர்ர நிறுத்தச் சொன்னீங்க?
@@@@@@#
அந்த டீ.வி. பொட்டியத்தான்டா சொன்னேன்.
@@@@@@@
டீ.வி. பெட்டிக்கும் கொர்ரு கொர்ருக்கும் என்னங்க பாட்டி சம்பந்தம்?
@@@@@@@
அடா முட்டாப்பயலே, அந்தப் பொட்டி சுச்சை எப்பப் போட்டாலும் அந்தக் 'கோரானா' கொர்ரைப் பத்திய சொல்லிட்டு இருக்கிறாங்க. அந்தக் கொர்ரு கொர்ரு கேட்டாலே இடி இடிக்கிற மாதிரி இருக்குதடா.
@@@@@@@
ஓ..... கொர் கொர்ரு கொரோனாவைப் பத்திச் சொல்லறீங்களா.
@@@@@@@@
ஆமான்டா அறிவு கெட்டவனே.

எழுதியவர் : மலர் (5-May-20, 9:58 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 63

மேலே