சுதந்திரம் முன்னும் பின்னும்
இன்னல்கள்
எத்தனையோ
இசைந்து ஏற்றனர்
அன்னியன்
வெறிக்கு
சிந்திய
இரத்தங்கள்
மேதினில்
எண்ணிலடங்கா
திண்ணியராக
வலம் வந்த
சுதந்திர வீரர்கள்
மண்ணின்
விதைகள்
மறந்து தான்
போனரோ
இன்றைய
இளைஞர்கள்
பெற்ற சுதந்திரம்
சுரண்டப்படுகிறது
தவணை
முறையில்
பல சட்டங்கள்
போடப்பட்டு...
விழிகள்
திறந்திருக்கும்
போதே
முழிகள்
திருடப்பட்டுவிடும்
எச்சரிக்கை
வேண்டும்
இல்லையேல்
இன்னொரு
சுதந்திரத்திற்கு
ஆயத்தமாக
வேண்டும்
காந்தியையோ
சுபாஷையோ
எங்கே தேடுவது ?
மழை துளிகளாக
மக்கள் கூட்டம்
அணை
கட்டினால் தானே
நல்வழி போகும்
நல்ல தலைவனை
எங்கே தேடுவது...
சொந்த பணத்தை
நாட்டிற்கு ஈந்தனர்
இன்றோ
தலைகீழ்
பொருளில்.
சமுதாயம்
சுயநலத்தில்
பொதுநலம்
எங்கே
தேடித்தான்
பார்க்க
வேண்டும்
காற்றை கூட
அடைத்து
வைப்பான்
நாளை எனக்கு
தேவையென்று
குறைச் சொல்லி
பயனில்லை
எல்லோருக்கும்
கிடைக்கும்
என்றால்
ஏன் இந்த
அவல நிலை
சட்டம்
இயற்ற வேண்டும்
அதில்
சாதிகள் இல்லாது
படிப்பை
அடித்தளமாக
தகுதியை
சோதனை செய்
இலஞ்சம்
இலாவன்யம்
உடனே
கைது செய்
ஊழல்
கைது சட்டம்
உடனே
அமலில் வை
அரசு
வேலைக்கு தேர்வு
ஆள்வதற்கு
பேனா
மையா ?
தகுதியை
தீர்வு செய்
தலைவருக்கு
சொத்துக்கள்
எதற்கு
கூடவே கூடாது
பதவிக்கு
முன்னும்
பின்னும்,
சேவையே
குறிக்கோளாக...
ஊதியம்
பெற்றுக் கொள்
உழைப்பதற்கு...
நல்வழியை தேடி
நானிலம்
போகுமே...!!!