எது சுதந்திரம்

என் அம்மாவிடம் சொன்னேன் சுதந்திரம் என்பது என்னைப் பொருத்தமாட்டில் நான் செய்ய விரும்புவதை செய்வது மட்டுமல்ல.. நான் செய்ய விரும்பாததை என்மேல் திணிக்காமல் இருப்பதுதான் சுதந்திரம். கொடியேற்றுவதாலோ! மிட்டாய் கொடுப்பதாலோ! சுதந்திரம் வந்துவிடுவதில்லை! பறவைக்கும், காற்றுக்கும் இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா? வீரத்திலும், விவேகத்திலும் விளைந்தது எங்கள் சுதந்திரம் என்று வாதிடுகிறவர்களே!
தினம் தினம் கிழிந்த ஆடையை உடம்பில் உடுத்தி உழைக்கும் உழவனுக்கு உணவில்லை. நள்ளிரவில் தனித்து நடக்க பெண்ணுக்கு தைரியமில்லை. சிரித்து விளையாடிய குழந்தையிடம்
சீறி பாய்ந்த வஞ்சகர்களை சுட்டு தள்ள அதிகாரிகளுக்கு உரிமையில்லை. தாழ்த்தபட்டவன் அவன் என்று தள்ளி நடக்கும்
காலம் இன்றும் மாறவில்லை. கொள்ளைகளும், கொடுமைகளும் மட்டும்தான் மிச்சம் நீங்கள் வாதிடும் சுதந்திர இந்தியாவில். இந்த நிலைமையை பெறத்தான் - தன் உயிரை மாய்த்தோம் என்று என் தியாகிகளுக்கு தெரிந்தால்
அன்றே சுதந்திர இந்தியா என்னும்
என்னத்தை கை விட்டிருப்பார்கள்.
“”சாதிகள் இல்லையடி பாப்பா
குலம்தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்”” என்றான் பாரதி. ஆனால் இன்று கல்வி முதல் கல்யாணம் வரை “”சாதிகள் வேணுமடி பாப்பா
குலம்தாழ்த்தி உயர்த்தி சொல்லல் கௌரவம்”” என்றாகிவிட்டது. வண்ணத்துபூச்சியின் கால்களில்
கட்டப்பட்ட கருங்கல்லாய் சுதந்திரமிங்கு சூழ்ச்சமமாய்
சூறையாடப்படுகிறது என்றேன். உன் கண்ணில் ஏன் இந்த கோபம்??
மனதில் ஏன் இந்த வெறி??
வார்த்தையில் ஏன் இந்த அவமரியாதை?? என்றாள் என் அன்னை என்னிடம், நம் நாட்டில் எத்தனையோ நிறைகள் உண்டு!
நிறைகளை சொல்ல நிறையபேர் உண்டு. குறைகளை அடிக்கோடிட நானாவது இருக்கிறேன் என்றேன்.
✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (14-Aug-20, 9:59 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : ethu suthanthiram
பார்வை : 1696

மேலே