கர்ப்பகாலம்

உடையவனோடு உடல் சேர்ந்து
உணர்ச்சியின் உன்னதம் எய்தி
உயிர் நீரை உள்வாங்கி
கொண்டவனின் காதல் பரிசை
குளவிளக்கே உன்னை கருவாய் சுமந்து
கடல் அலை நுறையென காலம் கரைய
கண்ணே என் கருவில் நீ வளர
கர்ப்பணையில் நான் உன்னை வரைய
அசைவ பிரியர் நாசி தொட்ட உணவு வாசம்
தரும் அதிருப்தி போலும்
இயந்திரம் ஆய்வில் உன் இருதயத்தின்
இசையில் என் விழி மலர்ந்தது
கருவறை எனும் சிறைதனிலே
காதலுடன் காத்திருப்பேன்
கிழிக்கும் ஒவ்வொரு தேதியிலும்
உன் விடுதலையை நெருங்கிடுவென்
தும்பை பூ வெண்மையோ அல்ல
கோகுல கண்ணனின் கருமையோ அறியாது
உன்னை சிந்தையால் காணும் நேரமெல்லாம்
என் கண்ணுக்கு மழை மேகம் தரும்
வானவில்லாய் விருந்தலிப்பாய்
உதித்தது யுவனோ யுவதியோ
உன்னை காணும் வரை அவதியே
நல்வழி உயர்த்த நான் இருப்பேன்
உன் வழி எதுவோ இப்புவியில் வாழ
கள்வனோ காதல் மன்னனோ
கணிதவியல் மேதையோ கபடி வீரனோ
பார் போற்றும் பேர் அழகியோ
நடனத்தில் ஒரு ரம்பையோ
விண்ணிலோ மண்ணிலோ உந்தன் விருப்பம்
உன் முடிவிலே என் இயக்கம் தொடரும்
புணர்ச்சின் உணர்ச்சியில் புள்ளியாய் பிறப்பெடுத்து
பத்து திங்கள் பக்குவமாய் உருவெடுத்து
பிறப்புறுப்பை பிளந்து வருவாயோ அல்ல
சிறைப்பிடித்த அடிவயிற்றை அறுத்து வருவாயோ அறியேன்
ஆயினும் அவதரிக்கும் அந்நேரம் உன் அழுகுரலை
முதலும் முடிவுமாய் மகிழ்ச்சியோடு
செவி குளிர கேட்க்க காத்திருக்கும் இவள்
உன் பிறப்பை எதிர்பார்க்கும் தாய் 😍💕

எழுதியவர் : - தினேஷ் ஏ (30-Jul-18, 5:16 pm)
சேர்த்தது : தினேஷ் ஏ
பார்வை : 1081

மேலே