நீ உதிக்கும் தருணம்

நீ உதிக்கும் தருணம்
நான் வலியோடும் மகிழ்ச்சியோடும் கிடப்பேன்
நீ இந்த அழகிய உலகை பார்க்க
பத்து மாதம் இருட்டில் குறுகி கிடந்தாயே !
இன்று உனது பூ போன்ற பாதம் இந்த பூவுலகில் படவே
தவமாய் தவம் கிடந்தேனே .
உனக்காக எல்லாம் பொறுத்தேன்
நீ இவுலகில் உதிப்பதற்காக
மரணம் கூட நான் ஏற்றிருப்பேன்
நீ இந்த அழகிய உலகினை காண
உன்னை சுமக்கையிலே பட்ட துன்பமெல்லாம்
இன்று சுகமாக தெரிகிறதே
எதோ ஒரு பரவசம
ஆனால் சொல்ல தெரியவில்லை
என்னை அறியாமல் உன்னை காணும் ஆவல் வருகவே
எப்படி இருப்பாய் என்று சிந்தனை செய்யவே
நீ பிறந்த பிறகு மாறும் வாழ்க்கை எண்ணி சிரிக்கவே
நீ பேசும் மழலை பேச்சினை கேட்டு மகிழவே
நீ நடக்கும் நடையினை கண்டு ரசிக்கவே
நீ விளையாடும் விளையாட்டில் நானும் குழந்தையாகி போகவே
நீ சிரிக்கும் சிரிப்பில் இந்த உலகம் மறந்து போகவே
எண்ணி எண்ணி நான் சிரிக்க கனவென்று தெரியவர
எல்லாம் மெய்யாக எத்தனை நாள் வேண்டும் என்று காண்கிறேன்
நீ உதிக்கும் தருணம் நான் எதிர் பார்த்து காத்துக்கிடக்கிறேன்
அச்சத்தோடும் ஆனந்தத்தோடும்
ஆவலோடும் சுகமான வலியோடும்
நாட்காட்டியை தினமும் புரட்டுகிறேன்
விரைவில் அந்நாள் வர வேண்டும் என்று !
நீ உதிக்கும் தருணம் எதிர்நோக்கி ................................

எழுதியவர் : பிரகதி (31-Jul-18, 11:43 am)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 3711

மேலே