வரங்கள் அழுகின்றன -

நந்தவன காற்றுயென
சொந்தம் கொள்ள நீ யார்
எந்தவனம் நீ செய்தாய்
என்னைக் கொல்ல நீ யார்

வாயுக்கும் முறைவாசல்
செய்தவனம் நான் தான் -மனிதா
உன்தாய்க்கும் சுவாசம்
தந்தவனம் நான் தான்

பகலுக்கும் போர்வைப்
தந்தவனம் நான் தான்
முகிலுக்கும் தூது
விட்டவனம் நான் தான்

புயலுக்கும் தடையாய்
நின்றவனம் நான் தான்
புழுவுக்கும் குடையாய்
நின்றவனம் நான் தான்

நீரையும் நிற்கச்
செய்தவனம் நான் தான்
நிலத்தையும் சிறக்கச்
செய்தவனம் நான் தான்

நான் தான் நான் தான்
எல்லாமும் நான் தான் -இன்று
இல்லாமல் போனவனமும்
நான் தான் நான் தான்

நான் செய்த பாவமொன்றே
'மனிதப்பாம்புக்கும்' பாலூற்றி நின்றேன்

ஏழைத் தோப்பிலும் நான்
மரம் தான் மரம் தான்
எசமான் தோப்பிலும் நான்
மரம் தான் மரம் தான்
என்னைக் கொன்றிட மனிதப்பாம்பினமே! ஏன் பிறந்தாய்? பிறந்தாய்?????

- கல்லறை செல்வன்

எழுதியவர் : கல்லறை செல்வன் (5-Jul-18, 7:56 pm)
பார்வை : 428

மேலே