மரம் பேசுகிறேன்

உங்கள் தோழன் பேசுகிறேன்
புரியவில்லையா ?
நான் மரம் உங்கள் தோழன் அல்லவோ
நீங்கள் என்னை எப்படி எண்ணுகிறீர்கள் தெரியாது
ஆனால் நானும் இவுலகில் வாழ பிறந்த ஒரு உயிராய் பேசுகிறேன்
எல்லாம் உயிர் தானே
எல்லாம் சமம் என்று உன்னையும் என் தோழனாய் எண்ணுகிறேன்
ஏனோ என்னால் பேச முடியாது
ஆனால் எண்ணுகிறேன்
நீ என்ன கேட்டாலும் நான் தருவேன்
என்னை அடியோடு சாய்த்து விட்டாலும்
எங்காவது வேர் விட்டு துளிர்ப்பேன்
என்னை வளர்த்தல் நன்மை ஆனால் ஏனோ
என்னை வெட்ட தான் நீங்கள் ஆசை படும்போது
நானும் பொறுமை காப்பேன்
ஏன் என்றால் நீ என் தோழன் !
உனக்காக பொறுக்காமல் வேறு யாருக்கு தான் பொறுமை காக்க போகிறேன்
ஆனால் மற்ற உயிர் இனங்களும் வாழவே நான் பிறக்கின்றேன்
அதை நீங்கள் நினைவில் கொள்ளவில்லையோ ?
தோழனே என்னை வெட்டாதீர்கள்
என்றுமே உங்களுக்கு பயன் உள்ளதாய் இருப்பேன்
என்னை மறந்து விடாதீர்கள்
இன்று வெட்டி விட்டு நாளை கவலை கொள்ளாதீர்கள்
இது கூட உங்கள் தோழனாய் கூறுகிறேன்
இயற்கை காக்க முயற்சி செய்யுங்கள்
அந்த இயற்கையில் என் பங்கும் இருப்பதை மறவாதீர்கள்
இயற்கையே நமது ஆதாரம் என்று நினைவில் கொண்டு காக்க முயலுங்கள் தோழா
என்றும் நட்புடன்
மரம்

எழுதியவர் : பிரகதி (5-Jul-18, 11:56 am)
Tanglish : maram pesukiren
பார்வை : 859

மேலே