காகேவலர்கள்

கா(கே)வலர்கள்:
ஆட்சியாளர்களுக்காக தன் காட்சிகளை மாற்றிக் கொள்ளும் மாக்கள்,
உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் உண்பவர்கள், பாதுகாக்க வேண்டிய மக்களை பரலோகம் அனுப்பிய பாவிகள்,
முத்துநகர் மக்களின் இதயங்களை கிழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரத்தத்தில் அபிஷேகம் செய்யும் அயோக்கியர்கள்,
வீதிக்கு வந்த எம்மக்களை குண்டுகளால் துளைத்த கோழைகள்,
இறகிருந்தால் என் மக்கள் பறந்திருக்கும்... குருவியென எம்குலத்தை சுட்டவனே.......... அம்மக்கள் தாக்கி ஒரு போலிஸ் சாகவில்லை.. பிறகு ஏன் சுடும் ஆனை இட்டாய் இழி பிறப்பு ஆட்சியரே... வானம் நோக்கி சுடவில்லை, காலை பார்த்து சுடவவுமில்லை..........
ஆளத் தெரியா ஆட்களிடம் ஆட்சி வந்த காரணத்தால்...
காணொலியில் காண்கயிலே எம் கண்ணில் உப்பு மழை.....😂

எழுதியவர் : கோட்டீஸ்வரன் (22-May-18, 11:05 pm)
பார்வை : 81

மேலே