வாழ்வில் SPACE இடைவெளி அவசியம்

இடைவெளி, இடைவெளி
இது இல்லை என்றால்
இனிமை ஏது வாழ்வில்
இன்பமும் ஏது உறவில்
ரயிலில் பயணம்,பேரூந்தில்
முட்டி முடங்கி நிற்கும்
நேரத்தில் புரியும் நமக்கு
இடைவெளி இடைவெளி
பெரிய கோவில்கள்
தெய்வ தரிசனம் செய்ய
நிற்கின்றோம் பெரிய 'கியூ 'வில்
மூச்சு திணறுது தெரியும் அப்போது
இடைவெளி , இடைவெளி
பள்ளியில் படிக்கையில் நேரமில்லை
ஓயாது புத்தகமும் கையும்
அதன் பின் வீடு திரும்ப,'ஹோம் ஒர்க்'
ஓய்வில்லை,சிந்திக்க நேரமில்லை
என்ன படிப்பு முறை இது ,புரியும்
அப்போது, இடைவெளி, இடைவெளி
காதலில் காதலன் தரும் ஓயாத
தொல்லை, தீராத விளையாட்டு
புரியும் அப்போது இதன் தேவை
அதுதான், இடைவெளி, இடைவெளி
மோகமும், காமமும் வாழ்க்கை
என்று எண்ணி வாழ்ந்திடில்
வாழ்க்கை விரைவில் கசந்திடும்
அங்கும் தேவை இடைவெளி
அவசர வாழ்க்கையில் கணவனும்
மனைவியும் ஒருவருக்கொருவர்
ஊடலில் வாழ்க்கை நடாத்தல்
தனிமையில் சிந்திக்க முடியாமை
அவர்கள் கேட்பது இடைவெளி
இடைவெளி, இன்றைய புதுயுக வாழ்வில்
அதுதான், 'space , 'space '
'space ' இல்லையேல் வாழ்வில்
'grace ' இல்லை இது புரிந்தால்
எல்லாம் இன்பமே வாழ்வில்

எழுதியவர் : மிழ்பித்தன்-வாசுதேவன்- (23-May-18, 5:36 am)
பார்வை : 94

மேலே