குடிகாரன்
நீயோ!
மதுவுக்கு மயங்கி மகிழ்ச்சியில் தள்ளாடுகிறாய்...
தாயோ!
பசிக்கு மயங்கி வறுமையில் தள்ளாடுகிறாள்...
நீயோ!
போதைக்கு அடிமையாகி பணத்தை வாரி வாரி இறைக்கிறாய்...
மனைவியோ!
கூலிக்கு அடிமையாகி தோல் உரிய உரிய இழைக்கிறாள்...
நீயோ!
குடித்துக் குடித்து சொர்க்கத்தை கனவிலே காண்கிறாய்...
மகளோ!
விழித்து விழித்து நரகத்தை உன் கண்களிலே காண்கிறாள்...
நீயோ!
மது போதையில் உடலில் பலம்மின்றி சாக்கடையில் வீழ்ந்து கிடக்கிறாய்...
மகனோ!
பள்ளி போகையில் மனதில் பலமின்றி சாலையோரம் விழுந்து கிடக்கிறான்...
புத்தகப் பையேடு........
த.சுரேஷ்.