நான் கண்ட பெண்

நான் கண்ட பெண்
பாரதி கண்ட புதுமை பெண்ணே
நானும் உன்னை கண்டேனடி...
காதல் என்ற ஆசையிலே
தானாய் நெருங்கி வந்தேனடி...
காதல் என்று சொல்லும் முன்னே
உன் விழியை நானும் கண்டேனடி...
என் காதல் என்ற காட்டுத்தீயை
உன் ஒற்றை பார்வையில் அணைத்தாயடி...
பாரதி கண்ட புதுமை பெண்ணென
காதலில் நானே மறந்தேனடி...
கையை பிடித்து இழுத்த நொடியே
என் ஒற்றை கன்னம் சிவந்ததடி...
Sorry... என்ற வருத்தம் வேண்டாம்...
காதல் என்ற புன்னகையே போதும்...
- த.சுரேஷ்.