அன்பு தோழி

அறியாத வயசில்
கண்ணாமூச்சு ஆட்டம்
ஆடி பின்னாளில்
தொலைந்த
கா வா பழமா
நட்பல்ல . . !

பள்ளிக்கூடத்தில்
சதா சண்டையிட்டுக்கொண்டு
கொடுத்தல் வாங்கல்
கணக்கு வைத்துக்கொள்ளும்
தியாகம் அறியா
சிறுபிள்ளை நட்பல்ல . . !

உயிராக காதலித்து பின்
காதல் ஒத்து வரல
நட்பாக பழகலாம்
என தடம் மாறிய
நட்பும் அல்ல . . !

அறியாத எண்களிலோ
முகப்புதிரையிலோ
பேசி சிநேகமானா
யாரோ ஒரு
முகம் அறியா
நட்பல்ல . . !

அந்த இறைவன்
நான் ரசிப்பதை எல்லாம்
உன்னிடத்தில் தந்து
உன்னை எனக்கு
அறிமுகம் செய்த நட்பு

பெண் என்றாலும்
பெண்ணாக பழகாதவள்
குறும்புகளால் சிறுமியாகவும்
அன்பால் தாயாகவும்
'Goiyala' னு
சொல்லும் போது
நண்பனாகவும் கண்ட நட்பு

நட்பால் பெண்களிடம்
பேச கற்று தந்தது

அவள் அக்கறை
(Take care Be safe)

நாளைக்கு ஐந்து முறை
(Saptiah)

உறங்கும் முன்
கடைசியாக அவள்
(Sweet Dreams)

ஒளிவு மறைவு
இல்லாமல் பேசுவாள்
கவிதை புத்தகமாக

பழகியது
இதயம்
அன்பை
இனி
பழக வேண்டும்
அவள் மாற்றத்தை

சொல்லி சொல்லி
அன்பு செய்தவள்
சொல்லாமல்
பிரிந்து போகிறாள்

கலைந்து போன
ஒரு கனவு போல்
மீண்டும் வராமல் போகிறாள்

அலைபேசி
முகப்புதிரை
வாட்ஸ்அப்
எங்கும் இருக்கிறாள்
எனக்கு ஒரு
( Hai )
சொல்லாமல்

இன்பம் வந்தாலும்
துன்பம் வந்தாலும்
அவளோட
( Hw r u )
வருவதில்லை

இருந்தும் அவளோடு பேசுகிறான்
காற்றோடும்
கனவோடும்
நினைவோடும்
நடைபாதை வழியாக
வழிந்தோடும்
என் நட்போடு

தோல்வி வரும்
வேலையில் உன்
( dnt wry ) இல்லை
வெற்றி வரும்
வேலையில் உன்
(congrtZ) இல்லை

என்னை முதல்முதலில்
ஊக்குவித்தவள்
இன்று நட்பு
ஊசி போடவில்லை

ஆணோடு ஆண்
பெண்ணோடு பெண்
கொண்டால் தான்
உண்மையான நட்பா

காதலில் உண்டு
பொய்களும் தோல்விகளும்
என்றும் நட்பில் இல்லை

நட்புக்கென்ன ஆண் பெண்
நட்புக்குள் இல்லை
ஆண் பெண்

அவள் காதல் நட்பை பிரிக்கலாம்
காலம் அவள் அன்பை குறைக்கலாம்
திருமணம் நட்பை துறக்கலாம்
நினைவுகொள்
உன் காதல் வலிக்கு மருந்தாக இருந்தது என் நட்பு
காலத்தால் நீ கண்ட கண்ணீரை துடைக்க வந்தது என் நட்பு
உன் திருமணத்தில் அதிக மகிழ்ந்ததும் என் நட்பு
இதோ
உரிமைகள் இழந்து
அன்பை துறந்து
போ வேன்கிறது
என் நட்பு
பெண்ணாக
நீ
பிறந்த பாவத்தால்

வி யையும்
த் தையும்
யா வையும்
மறப்பது சிரமம்
என் நட்புக்கு
மறக்கிறேன்
என் நட்புக்கு

ஒற்றை சிறகோடு
நிற்க்கும் பறவையாகிறேன்
உன் நட்பின்
சிறு துளி அன்பு போதும்
நான் வான் உயரம் பறக்க

வருடம் ஒருநாள் வரும்
பிறந்த நாள் அன்று
( Hpy bdy Thozha ) போதும்
என் நட்பின் ஆயுள் வாழ

கடைசியாக
நண்பன் என்று
உன் திருமணத்தின் அன்று
உன் கணவனிடம் அறிமுகம் கூட
செய்யாத தோழியே

காத்திருக்கிறேன்
என் திருமணத்தன்று
இவள் என் (உயிர்) தோழி
எனும் வார்த்தையில்
உயிரை உயிருக்குள்
மறைத்து என் மனைவியிடம்
அறிமுகம் செய்ய என் நட்பை . . !

எழுதியவர் : கவி தமிழ் நிஷாந்த் (6-Apr-16, 7:26 am)
Tanglish : anbu thozhi
பார்வை : 5274

மேலே