விடை பெற வேண்டிய இந்த நாள்

எவ்வாறு சொல்வது
என் கால் பதித்த
கல்லூரி வாசலில்
முகவரி தந்த நட்பின்
முன்னுரையை சொல்லவா

அன்னை , தந்தை யின் பிரிவு
மீண்டும் உன் மூலம்
கிடைத்ததை சொல்லவா

அவர்களிடம்மும் கூட சொல்ல முடியா
சில உணர்வுகளை
உன்னிடம் பகிர்ந்ததை சொல்லவா

அவர்களிடமும் கூட கிடைக்க பெறாத
சந்தோசம் உன்னிடம்
கிடைத்ததே அதை சொல்லவா

கல்லூரியின் வறண்டாவில்
மணி கணக்கில் அரட்டை
அடித்ததை சொல்லவா

அது உன் ஆள்
இது என் ஆள்
என்று நமக்குள்ளே போட்ட
ஒப்பந்தத்தை சொல்லவா

அவன் உன்னை பார்கிறாண்டி
உன்னை பார்த்து ரொம்ப வலிராண்டி
உன் ஆள் வந்துட்டாண்டி
என்று தினம் தினம் முழங்கியதை சொல்லவா

தேர்வறையில் எனக்கு தெரியா
கேள்விக்கு நீ விடை தந்தாயே
அதை சொல்லவா

தேடி தேடி நம் ஆடைகளை
மாற்றி கொண்டோமே
அதை சொல்லவா

கரும் பலகையில் கிச்சி கிச்சி
வரைந்த வண்ணத்தை சொல்லவா

நான் அழுதநாட்களில்
எனக்கு அன்னையாகவே மாறினாயே
அதை சொல்லவா

உணவுகளை மாறி மாறி
ஊட்டி கொண்டோமே
அந்த நாட்களில் சொல்லவா

என்னடி என்ன பிரச்சனை
என் முகத்தை கண்டு
சொல்லிடுவாயே அதை சொல்லவா

சினமா பட்டறையில்
விசில் பறக்க படம் பார்த்தோமே
அதை சொல்லவா

இவர்கள் எல்லாம் எங்க
உருப்பிட போறாங்க
என்று சொல்பர்களை
திட்டினோமே அதை சொல்லவா

எதை சொல்லவது
நம் முகவரிகள் வேர் வேராக இருந்தாலும்
கல்லூரியின் ஒரே முகவரியில்
நாம் இணைந்தோம்

ஒரு நட்பின் பூமியில்
நாம் வாழ்ந்தோம்
அதில் சந்தோசங்கள் ஏராளம்
அதில் இரசனைகள் ஏராளம்
அதில் அன்பு மட்டும் தான் தாராளம்

இந்த நாட்கள் தான்
என்னுடைய உண்மை டைரி
இதில் எழுத பட்டவைதான்
என்னுடைய முழு சுதந்திரம்

இதை விட்டு செல்கிறேன்
உன் நட்பை விட்டு செல்கிறேன்

ஒரு ஆணின் நடப்பு
இறுதி பயணம் வரை செல்கிறது
ஆனால் ஒரு பெண்ணின் நட்பு
இந்த கல்லூரி வாசலிலே
கல்லறையாக அடைக்க படுகிறது

என்றாவது ஒரு நாள்
நம் முகங்கள் பார்த்துக்கொள்ளும்
அன்று நம்முடைய ஆனந்தம்
வான் எல்லை அற்றது ..,

நன்றி தோழி
உன்னுடைய நட்பு
எனக்கு பொக்கிஷம்.,
உன்னுடைய நினைவு
எனக்கு ஒரு தாஜ்மஹால் ...,

எழுதியவர் : காந்தி (8-May-18, 10:55 pm)
பார்வை : 192

சிறந்த கவிதைகள்

மேலே