என் மனைவி என் காதலி

நான் காலை கண் விழிக்கும் போது
எந்தன் காதோரம் உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் வீச வேண்டும்...

ஒரு எச்சில் முத்தத்தோடு காலை தேநீர்
நீ தர வேண்டும்!!!

நான் குளிக்கையில் என்னுடன் சேர்ந்து
நீ கொஞ்சம் நனைய வேண்டும்!!!

என்னை உன் மார்போடு அனைத்து
தலைதுவட்ட வேண்டும்!!!

உன் கையால் உணவு ஊட்டிவிட
வேண்டும்...
நான் மெல்லமாக உன் விரல் கடிக்க
நீ செல்லமாக என்னை அடிக்க
வேண்டும்...

உன்னை பிரியாமனமுடன்
நான் வேலைக்கு செல்ல...
நான் மாலை திரும்ப வரும் வரை
எனக்கு தேவையான முத்தங்களை
நீ வழங்க வேண்டும்...

உன்னை மயக்க குட்டி குட்டி கவிதைகள்
குறுஞ்செய்தி மூலம் நான் அனுப்ப
உதட்டின் ஓரமாய் புன்னகை வைத்து
உந்தன் உயிரானவனின் வருகைக்காக
நீ காத்திருக்க வேண்டும்...

மாலை வந்ததும் உன் மடியில்
நான் விழ வேண்டும்...
நீ என் தலை கோத வேண்டும்...
என் நெற்றியில் ஒரு அழுத்தமான
காதல் முத்தம் நீ பதிக்க வேண்டும்...

எனக்காக நீ சமையல் செய்யும்
வேளையில் திடீரென்று
உன்னை பின்னால் இருந்து
கட்டியணைக்க வேண்டும்...
கழுத்தோரம் குட்டி முத்தமிட வேண்டும்...

இனிமையான இரவின் நேரம்
நாம் செய்யும்
காதல் சேட்டைகளை கண்டு
நமக்கும் இது போல் ஒரு காதல் துணை
இருந்திருக்கலாம் என்று
அந்த நிலவும் ஆசை கொள்ள வேண்டும்!

என் விரல்கள் உன் தேகம்
தீண்டும் போது
கோடி மலர்கள் போல் உன் முகம்
மலர வேண்டும்...

உன் உச்சி முதல் பாதம் வரை
கோடி முத்தங்களால் நிரப்பிட வேண்டும்..
உன்னை உச்சநிலைக்கு நான் கொண்டு
செல்ல வேண்டும்...

உன் மார்பு சூட்டின் கதகதப்பில் நான்
ஆயுள் முழுவதும் உறங்க வேண்டும்!!!

மிண்ணும் உன் வண்ண மேனியை
நாளும் நான் காண வேண்டும்...
நித்தம் நித்தம் உன் நினைவில்
நான் வாழ வேண்டும்...

உந்தன் கூந்தல் வாசத்தில்
தினமும் நான் மூழ்க வேண்டும்!!!

என் மூச்சு உள்ள வரை உன்னை
காதலிக்க வேண்டும்...
உனக்கு மூச்சு முட்டும்வரை
நான் கட்டியணைக்க வேண்டும்...

உன்னிடம் காதல் ரசம்
சொட்ட சொட்ட
நான் பருக வேண்டும்...

என் உயிர்போகும் வரை உன் வாசம்
என் மேல் வேண்டும்!!!

உன் தோளில் சாய்ந்து கதைகள் பல
பேச வேண்டும்...
உன் ஆசைகள் அனைத்தும் நான் நிறைவேற்ற வேண்டும்..

குட்டி குட்டி சண்டை நீ போட வேண்டும்
கெஞ்சி கொஞ்சி நான் சமாதானம்
செய்ய வேண்டும்...

சின்ன சின்ன சில்மிஷங்கள்
நான் செய்ய வேண்டும்...
சின்னவிழி கோபம்
நீ கொள்ள வேண்டும்...

யாரும் இல்லா வேளையில் உனை
கையில் தூக்கி கொஞ்ச வேண்டும்...
அனைவரும் இருக்கும் வேளையில்
கள்வன் போல் உன் இடை கிள்ள
நீ நாணத்தால் தலைகுனிய வேண்டும்...

உன்னை நான் சுமக்க வேண்டும்...
என் உயிரை நீ சுமக்க வேண்டும்...

நான் சுவாசிக்கும் காற்றில் எங்கும்
உன் சுவாசம் வேண்டும்..
வாழும் காலம் முழுவதும் உன்னை
காதல் செய்ய வேண்டும்...!

இறுதியாக
உன் கண்கள் பார்த்து என்னுயிர்
பிரிய வேண்டும்!!!!

கல்லறையிலும் நம் காதல்
வாழ வேண்டும்!!!!

இந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில்
நடக்கும் என ஆசைகொள்பவனாக,

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-May-18, 8:52 pm)
பார்வை : 16000

மேலே