நேற்று விவசாயி இன்று அனிதா நாளை நாம்தான்
இன்றோ ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர்
அன்று அவள் போராடிய போது
வேடிக்கை பார்த்த நாம்
இன்றோ ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர்
முகம் தெரியாதவர்கள் எல்லாம்
இன்று அவள் வீட்டின் முன்
ஆறுதல் சொல்லவா..?
இல்லை நானும் துக்கத்தில் பங்கேற்று கொண்டுவிட்டேன்
என்பதை மீடியாக்களில் தெரிய படுத்தவா..?
யாருக்கு வேண்டும் உங்கள் துக்க விசாரணை
அவள் கண்ணீர் சிந்திய போது
துடைக்க யாரும் இல்லை அன்று ,
இன்றோ கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
ஒட்ட ஆயிரம் பேர்
எந்த மீடியாவும் இவளுக்காக
முன்வரவில்லை
எந்த அரசியல் வாதியும்
இவளுக்கு ஆதரவாக பேசவும் இல்லை
எந்த சினிமா நடிகரும் இவளுக்கு
குரல் கொடுக்கவும் இல்லை
ஆனால் இன்றோ இவள் இல்லை
அப்ப எதற்கு உங்கள் ஆறுதல் ..,
உங்கள் துக்க விசாரணை ..,
யாருக்கு வேண்டும் உங்கள் கண்ணீர் அஞ்சலி ..?
தினம் தினம் TRP ன் பசிக்கு
மீடியாக்கள் ,
அவர் அவர் பதவிகளை காப்பாற்றி கொள்ள
அரசியல் வாதிகள்,
அடுத்தடுத்த படங்களை ஹிட் ஆக்கி கொள்ள
சினிமா காரர்கள் ,
இதை மூன்றுமே யார் உங்களுக்கு கொடுத்தது ..?
யாரால் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ..?
உங்களால் முடியுமா .?
யாரும் இல்லா வேற்று கிரகத்தில்
உங்களால் இவ்வாறு வாழ முடியுமா ..?
நீங்கள் சொல்வீர்கள் இந்த இடத்துக்கு
வர எவ்வளவு கஷ்டபட்டு இருப்பேன் என்று ..!
கஷ்ட படுங்களேன் பார்ப்போம்
மனிதர்களே இல்லா ஊரில் ..?
இந்த இடம் ஒன்றும் சும்மா வரவில்லை
ஒவ்வொன்றும் நம் முன்னோர்கள்
வேர்வை சிந்தியதாலும் ,
இரத்தம் கொட்டியதாலும் தான்
நாம் இன்று சுகமாக இருக்கிறோம் ..,
ஆடம்பர பங்களாவும்,
ஆடம்பர ஓட்டலில் விருந்தும் ஆட்டமும் ,
அங்கு நீங்கள் எடுக்கப்படும் செல்பியும் ,
facebook யிலும் whatsapp யிலும் போட முடிகிறது..
இருபத்தி ஏழு மாளிகை..,
ஒரு குடும்பம் வாழ,
எப்படி நீயே ஒவ்வொரும் செங்கல்லும் கட்டியதா ..?
இல்லை ,
ஒவ்வொரு மனிதனின் உழைப்பில் தான் உன் வாழ்க்கை..,
அவன் மட்டும் இல்லை என்றால்
உன் ஆடம்பரம் உனக்கு சொந்தம் இல்லை ..
இது எல்லா முதலாளிகளுக்கும் பொருந்தும்
இவர்களை மட்டும் நான் சொல்லவில்லை,
தன் குடும்பம்,
தன் பிள்ளை மட்டும் ,
நன்றாக இருந்தால் போதும் ..,
நாடு எவ்வாறு போனால் எனக்கென்ன ..?
என்று நீங்கள் போய்க்கொண்டு இருப்பீர்கள் எனில்,
நாளையும் வேடிக்கைதான் பார்ப்பார்கள்
இது உங்களுக்கு நேரும் போதும் ..,
technology technology என்று நாம் எங்கு போய்க்கொண்டு இருக்கிறோம்
bluewhale game மில் சேர்ந்து self suicide நோக்கித்தான்..,
oviya kaviya பற்றி பேச நேரம் இருக்கும் போது
நமக்காக போராடுபவர்களை பற்றி நினைக்காவிட்டாலும் ,
அவர்களை பைத்திய காரர்கள்,
பிழைக்க தெரியாதவர்கள் என்று சொல்லும் போது
சாகாமலே செத்து போய்விடுகிறார்கள்
இவர்களுக்காகவா நாம் போராடுகிறோம் என்று எண்ணி
இப்படியே நாம் வேடிக்கை பார்த்து கொண்டு
இருந்தோம் என்றால்,
நேற்று விவசாயி,
இன்று அனிதா,
நாளை நாம்தான் மிச்சம் இருப்போம்
ஏன் ஒரு தலைவன் கேட்டால்தான் கேட்குமா ..?
நாமெல்லாம் கேட்டால் கேட்காதா ..?
கேட்போம் தமிழா வா..,
ஒன்று சேர்வோம் தமிழா மீண்டும்..,
நாளைய தமிழகத்தை மீட்போம்
தமிழா
நீ வா..,