என்னை காதலித்து இருப்பாளோ

என் காது மடல்களில் உன் மூச்சுக்காற்று
மோதியவாறு நீ சொன்ன ஞாபகம் இன்னும்
இருக்கிறது என் இதயத்தில் பத்திரமாய்
"நான் உனக்கானவள் "என்று !

மணமேடையில் அக்கினியை சுற்றிவரும்போது
சுண்டுவிரல் பிடித்தே நடந்து வருவதைப்போலவே
வருவாய் என்னோடு
"எனக்கு இப்படிதான் உன்னோடு வர பிடித்து இருக்கிறது "
என்று சொன்ன வார்த்தை இன்னும் நான் மறக்கவில்லை !

"உன் தோள் சாய்ந்து அமர்ந்து பேசினால்"
என் துயரம் எல்லாம்
தூள் தூளாய் பறந்து விடுகிறது என்று சொன்ன வார்த்தைகள்
என் நினைவோடு பதிந்துதான் கிடக்கிறது !

மஞ்சள் தாலிக்கயிறு, உன்னைபோலவே இரண்டு
ஆண் பிள்ளைகள் ,"இறுதிநாள் வரை நீ வேண்டும் எனக்கு "
கண்ணீர் திவலைகள் கன்னம் வழிந்தோடியபடியே
சொன்ன வார்த்தைகள்தான் இன்னும் என் இதயத்தை
சுடு நெருப்பை போல சுட்டுக்கொண்டிருக்கிறது !


என் உடல் உள்ளம் உனக்கானது !
என் உயிர் பிரியும் நிலை வந்தாலும் உன்னை பிரியேன் !
என் உயிர் உள்ள வரை என்னை அன்பாக பார்த்துக்கொள்வாயா !

வார்த்தை கோர்வை ! வரிகளின் கோர்வை உனக்கு அழகாக வருகிறது
என்று கிண்டலாய் சொன்னதும் அடிக்க ஓடி வந்தாய் !

ஆனாலும் நீ சொன்ன அத்தனை வார்த்தைகளும் உண்மை
அன்போடு ,உள்ளத்திலிருந்து சொன்னவைதானா !
இல்லையேல் ! நாம் அடிக்கடி அமர்ந்து பேசும் அந்த பூங்காவில்
ஒரு குளம் இருந்தது ! அதில் தண்ணீர் வற்றாமல் இருக்கும்

"அந்த தண்ணீரில் நீ சொன்ன வார்த்தைகளை
எழுதி வைத்துவிட்டு போய் இருப்பாயோ !

என்ன செய்வது

மடியில் ஒரு குழந்தை !
கையில் ஒரு குழந்தையை பிடித்துக்கொண்டு
கணவனை ஏதோ திட்டிக்கொண்டே நீண்ட தூரம்
நடந்து போய் !

சற்றே என்னை திரும்பி பார்த்து விட்டு
வெகு வேகமாய் போய்க்கொண்டே இருக்கிறாய் !
கணவனோடு !

ஒருவேளை !

"என்னை காதலித்து இருப்பாளோ "

எழுதியவர் : முபா (2-Sep-17, 9:37 am)
பார்வை : 273

மேலே