என் தந்தை என்னக்கு நண்பன்

மூச்சு உள்ள வரை
எனக்காக நேசிப்பவன்
எனக்காகவே சுவாசிப்பவன்
என் தந்தை எனக்கு நண்பன்

என் தாய் என்னை
பத்து மாதம்
கருவறையில் சுமந்தாலும்
என் கைவிரல்களை
முதன் முதலில்
கரம் பிடித்தவன்
என் தந்தை

முட்ட முட்ட கண் விழிகளை கண்டு
முதல் முத்தத்தை
பதிய வைத்தவன்
என் தந்தை

பொட்ட பிள்ளையா
என் ஊரே சினிங்கிடும் வேளையில்
ஆமாம் பொட்ட பிள்ளைதான்
என்னை பெத்து எடுத்த பிள்ளை
அவ என் ஆத்தா
என் குல சாமி
செல்லம் ,என் தங்கம்
நீ வா வா
அவங்க கடக்கிறாங்க பிக்காலி பசங்க
என எனக்காக வாய்மொழித்தவன்
என் தந்தை

என் அம்மாவின் மார்பில்
பால் குடித்த நேரத்தை விட
என் தந்தையின் மார்பில்
விளையாடிய நேரங்களே அதிகம்

எனக்காக ஒரு பாட்டு
எனக்காக ஒரு ஆட்டம்
என் சிறிய புன்னகைக்காகவே
கோமாலி வேசம்
தினம் தினம் ..,

அவனை வாடான்னு சொல்லு
அவனை அடிச்சிருவேன்னு சொல்லு
என்று சொல்லி சொல்லி
என் தந்தை
என்னை வளர்த்ததாலோ என்னமோ
இன்னும் நான்
திமிர் பிடித்தவளாகத்தான்
வாயாடியாகத்தான்..,

இது ,அது வென்று
ஒவ்வொன்றாக பார்த்து
எனக்காக செய்யும் என் தந்தை
அப்பா அது வேணாம்ப்பா
என்று என் தந்தை மார்பில்
சாய்ந்து சொன்னாலே போதும்
சேரி கழுத
அதை தூக்கி போட்டுருவோம்
என் தந்தைக்கு அதை
பிடித்திருந்தாலும்
எனக்காக தியாகம் செய்ப்பவன்
என் தந்தை

நான் தவறு
செய்து இருந்தாலும் கூட
ஒரு போதும்
என்னை யாரும்
திட்டிட விட மாட்டான்
அது என் தாயக
இருந்தாலும் சரி
அடி போடி உள்ள
என் புள்ள தெரியாம
செஞ்சிட்டா,
அவ யாரு
என் புள்ள
என்று என் மேல்
வைத்திருக்கும் நம்மிக்கை
அளவிட முடியாது..,

என் அன்னை
இல்லா நாட்களில்
எனக்கு ஒரு அன்னையாகவும்
எனக்கு ஒரு சிறந்த நண்பனாகவும்
இருப்பவன் ஒருவனே
அவன் தான்
என் தந்தை

நான் மகளாக பிறந்த பொழுது
சந்தோஷ பட்டான்
என் தந்தை அன்று ,
இன்று வேதனை கொள்கிறேன்
ஒரு ஆண்ணாக பிறந்திருந்தால்
அவன் விழி மூடும் வரையிலும்
உடன் இருiத்திருப்பேன் என்று ,

நாம் எத்தனை பேர்
நம் தந்தையை ஏமாற்றுகின்றோம்
என்று தெரியவில்லை,
ஏமாற்றுகின்றோம் என்று
அவன் தெரிந்து கொண்டால்,
அந்நாளே ஆய்விடுவான்
நடமாடும் பிணமாக..,,

- திகான் காந்தி

எழுதியவர் : காந்தி (15-Aug-17, 2:14 pm)
பார்வை : 427

மேலே