மணவாசம் செய்ய வைக்கிறாய்

என்னவளே!
உன் அழகு
என்ன விலை?
கொன்னவளே!
உன் அழகால்
தினம் கொன்னவளே!

அழகு என்னும்
விலங்கால்
என்னை சிறை பிடிக்கிறாய்!
விடுதலை செய்திட
வேண்டின்
ஏனோ நீயும் மறுக்கிறாய்!

இதழோரம் புன்சிரிப்பால்
என்னை நீயோ
புண்படுத்துகிறாய்!
உன்னோடு வாழ்ந்திட விழையும்
என்னையும் நீயே
பண்படுத்துகிறாய்!

உன் உதட்டின் மேல் மச்சத்தை
பிச்சை கேட்ட
தூண்டுகிறாய்!
பிரிந்திருக்கும் வேளையில் எல்லாம்
உன் நினைவால் என்னை
தீண்டுகிறாய்!

நீரில் வாழும் மீனுக்கும்
தாகம் அதை
கொடுக்கிறாய்!
உன் நினைவால் வாழும்
என் தேகம் அதையும்
கெடுக்கிறாய்!

உன் செவ்வாயால்
எனைத் திருடி
செவ்வாயில் சேர்க்கிறாய்!
காதல் ஆய்வுகளை மேற்கொள்ள
உன் கன்னக்குழிகளை
அனுப்புகிறாய்!

அழகால் எனை
வசம் செய்து
சிறைவாசம் வைக்கிறாய்!
உன் அழகோடு
ஆண்டுகள் முழுக்க
மணவாசம் செய்ய வைக்கிறாய்! .........

தங்கமணிகண்டன்..............

எழுதியவர் : தங்கமணிகண்டன் (11-Mar-17, 10:19 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 75

மேலே