மனசே மனசே

ஏதேதோ எண்ணங்கள்
நினைவில்
வந்து....நனைந்து
போகிறது
என் கன்னங்கள்.....!!

கண்ணிமைகள்
இணையவே
இல்லை.....இணையற்ற
இன்னல்கள்
இவனைத்
தாக்குவதால்.....!!

கடல்தாண்டும்
பறவையே.....என்னவளைக்
கண்டுவா.....முடிந்தால்
அவளையும்
கொண்டுவா.....!!

வாழ்வு மலருமென்றே
புலரும்
பொழுதெல்லாம்
கானல் என்றாகிப்
போனது.....!

தலைவி
உன்நினைவில்
தலையணைகள்
என்மார்பில்.....
இறுகியே
கிடந்தது......!!

உள்ளம் வலிக்குதடி
உன்னைத் தேடித்
தேடியே....தேய்பிறையாகிறேன்....
ஒவ்வொரு
நொடியும்.....!!

எழுதியவர் : thampu (12-Mar-17, 2:37 am)
பார்வை : 206

மேலே