மனிதனிடம் கற்றது
அடுத்தவர் மோதிட வேடிக்கையாய்
அதனைப் பார்த்தே ரசித்திடுவான்,
தடுத்திட வராமல் தள்ளிநின்று
தூண்டி விடுவான் அரசியலில்,
அடுத்தே அவனிடம் வளர்ந்ததாலே
அந்த குணமே கோழிகட்கும்,
தடுக்கும் எண்ணம் இல்லாமல்
தொடர விட்டிடும் சண்டையையே...!
அடுத்தவர் மோதிட வேடிக்கையாய்
அதனைப் பார்த்தே ரசித்திடுவான்,
தடுத்திட வராமல் தள்ளிநின்று
தூண்டி விடுவான் அரசியலில்,
அடுத்தே அவனிடம் வளர்ந்ததாலே
அந்த குணமே கோழிகட்கும்,
தடுக்கும் எண்ணம் இல்லாமல்
தொடர விட்டிடும் சண்டையையே...!