பிரிவாலே என்னை வதைக்கிறாள்

கால் முளைத்த நிலவாய்
என்னை களவாடி சென்றுவிட்டாள்!
தேள் கொட்டிய திருடனாய்
வெளியே சொல்ல முடியாது தவிக்கிறேன்!

கடலில் கரைத்த பெருங்காயத்தை
காணும் இடமெங்கும் தேடுகிறேன்!
உடலில் வலிக்காத பெரும்காயத்தை
உயிரைத் தீண்டி உணர்கிறேன்!

அத்தி பூத்தாற் போல அவள் வரவைக் காண
அடங்கி கிடக்கிறேன் மொத்தமாய்!
புத்தி கேட்டு திரிகிறேன்
பூமியில் அவளைக் கண்ட நாள்முதலாய்!

தென்னை மரத்து கள்ளு போல
என்னை போதையில் தள்ளுகிறாள்!
தீயில் விழுந்த புழுவாக
தினமும் துடிதுடித்து போகிறேன்!

விமோட்சனம் வேண்டியே தவம் இருக்கிறேன்
வீதியில் அவள் வரும் நாளுக்காய்!
ஏனோ வர மறுக்கிறாள்
என்னை பிரிவாலே வதைக்கிறாள்!

தங்கமணிகண்டன்............

எழுதியவர் : தங்கமணிகண்டன் (28-Mar-17, 10:08 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 101

மேலே