நெஞ்சில் காதலேந்தி நீயென் அருகே

நீலவான்தனில் பிறையாய்நிலா
நீலவிழியில் முழுநிலவாய்
மாலைப்பொழு தின்தென்றலாய்
கூந்தல்காற் றிலாடநீயும்
புன்னகைஇத ழுடன்வந்தாய்
இளவேனில்
அந்திப் பொழுது மஞ்சள் தூவிட
நெஞ்சில்கா தலேந்தி நீயென் அருகே !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-21, 10:33 pm)
பார்வை : 49

மேலே