கடந்து விடவே நினைக்கிறேன் 6

நீரற்ற வெண்மேகங்கள்
நீயற்ற சாலைகளில் பொழியவே காத்திருக்கின்றன
நானற்ற உலகில் உன்னால் வாழ முடிவதைப் போல!

நிலவற்ற வானம் அப்பியிருக்கும் இருட்டில் ஒளிவீசக் காத்திருக்கிறது
நானற்ற உலகில் உன்னால் புன்னகைக்க  முடிவதைப் போல!

வீரியமில்லா விதைகள் வறண்ட நிலத்தில் முளைக்க காத்திருக்கின்றன
நானற்ற உலகில் உன்னால் நம்பிக்கை கொள்ள முடிவதைப் போல!

கிறுக்கல்களின் அறிமுகத்தை காட்டி கிறுக்கிய என்னை கிறுக்காக்கிவிட்டு ஓடி ஒளிந்து கொண்டாய் இப் பேருலகில்!

நானறியாத நானற்ற உனது உலகில் எனது எழுத்துகளுக்கு மட்டுமேனும் அனுமதி அளித்துவிடு...
அவையேனும் அலைப்புறுதலின்றி அமைதி கொள்ளட்டும்! 
_ இரா. மதிஒளி சரவணன்

எழுதியவர் : மதிஒளி சரவணன் (26-Nov-21, 11:26 pm)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
பார்வை : 190

மேலே