நிறுத்தவில்லை
பச்சைப் புல்வெளியில்,
அழகிய பறவையொன்று,
காலில் காயம்பட்டு,
தரையில் கிடப்பதைக் கண்டு,
கையிலெடுக்க நான் முனைய,
அதுவோ தானாகவே
தன் காலைப் பதிக்க
முயன்றும் முடியாமல்,
விழுந்தது பின் எழுந்தது,
இருந்தும் நிறுத்தவில்லை,
காலைப் பதிக்கும் வரை...