கடந்து கொண்டு இருக்கிறேன்

பறந்து திரிந்த இடங்களை
மெல்ல நடந்து
கடந்து கொண்டிருக்கிறேன்

சிதறிக்கிடக்கும் நினைவுப் பூக்களில் சிலதை சேகரித்து
கடந்து கொண்டிருக்கிறேன்

மறந்து விடாதாயென
ஏங்கி தவித்த அவமானங்களின் தடங்களை சற்றே தடவிவிட்டு
கடந்து கொண்டிருக்கிறேன்

மலடாகிப் போன உணர்வுகளை மணக்கச் செய்யும் விதம் அறிந்து
கடந்து கொண்டிருக்கிறேன்

மென்றுத் துப்பிய வார்த்தைகளின் கறைகளை அழிக்க முடியாது
கடந்து கொண்டிருக்கிறேன்

இதுவும் கடந்து போகும்
ஆனால் எதுவும் மறந்து போகாதே

மறக்க பிரயத்தனங்கள்
ஏதும் செய்யாமல்
அனைத்தும் எனக்கே
எனக்கென்ற அடையாள அட்டையோடு
கடந்து கொண்டிருக்கிறேன்..
ஆனால் நீங்கள்...?!!!
- மதிஒளி சரவணன்

எழுதியவர் : மதிஒளி சரவணன் (10-Oct-22, 4:27 pm)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
பார்வை : 146

சிறந்த கவிதைகள்

மேலே