ஸ்பரிசன்- கருத்துகள்

இங்கே மெசேஜ் களம் திறக்க நிறைய நேரம் எடுக்கிறது. எனவே உடனடியாக பதில் கொடுக்க தாமதம் ஆகிறது. இன்று அடுத்த பாகம் போட்டேன்

உண்மையை சொன்னால் இது உங்களுக்கு மட்டுமேயான பதிவு என்றும் சொல்லலாம்

வெளியே விட்ட எலி சுதந்திரம் கிடைத்தது என்று வெளியே ஓடாமல் ஏன் வீட்டுக்குளே மீண்டும் நுழைந்தது ?
வடையின் வாசனை. அதுவும் திவச வடைகளை விரும்பி சாப்பிடும். திவசம் போட வாத்தியார் கிடைக்காத இந்த காலத்தில் டீக்கடை வடைகள் கூட தேவாம்ருதமாக இருக்கும். உங்கள் வீட்டு வடைகள் சுவை எப்படியோ?

வால் அதன் பரிணாம குற்றம்.

என் கதை ரொம்ப குழப்பி விட்டதோ என்று அஞ்சுகிறேன்.

இந்த ராஜ கிழட்டு சிங்கங்கள் எனக்கு கொடுத்த மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. எமர்சனை கூட துணைக்கு வைத்து கொள்ளுங்கள். ஆல்பர் காம்யூவும் பக்க பலமாக இருப்பான். இவர்களில் எல்லாம் ஒரு வெறுமை உருவாகி இருந்தால் கேனோ உபநிஷத் படித்து விட்டால் போதும். அதுதான் இவர்களை ஜீரணிக்க உதவும் பஞ்சரிஷ்டம். எப்படியோ உங்களை தொடர்பு கொள்வதை நீங்கள் தவிர்க்கும்போது இந்திய அமைச்சுபணியில் ஒரு உளவாளி போலவே தெரிகிறீர்கள். இதுவும் நன்றாக இருக்கிறது.

மிக நீண்ட நாட்கள் ஆகி விட்டது. ஆயினும் உங்களுக்காக நான் சில புத்தகங்கள் பரிசளிக்க விரும்புகிறேன். Pdf வடிவத்தில்... எப்படி கொடுக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள்...😊😊😊

பட்டுக்கோட்டை கவிதை எழுத மாட்டார்.. நாவல்தான். படித்து கடந்து விட்டேன். கொஞ்சம் நவீனமாக எழுதிப்பார்த்தேன். வேறு ஒன்றும் இல்லை. மிக்க நன்றிகள்.

பழைய பாடல் என்றால் அது கண்ணதாசன் எழுதியதாக இருக்கலாம். எனக்கு கேட்ட நினைவுகள் இல்லை.

இந்தியா உலகுக்கு அளித்த கொடை காமசூத்திரம் மற்றும் பூஜ்யம் என்று ஒரு ரஷியர் பாரிஸில் இருக்கும் என்னுடைய நண்பனிடம் சொல்ல அப்படியா என்று அவன் என்னிடம் கேட்டான். பூஜ்யத்தின் மகிமை குறித்து விளக்கத்தெரியாது போழ்தினும் காம சூத்திரம் பற்றி கூற தெரிந்து இருக்கிறது எனக்கு.

மேலை தத்துவம்தான் ஆர்வத்தோடு வாசித்து வருகிறேன். நீட்ஷே வரை எஃகு பிடியாக இருக்கும் மேற்கத்திய தத்துவம் இருத்தலியம் நோக்கி போகும்போது கீழை சாயலை ஏற்றுக்கொண்டு மரணத்தையும் இருப்பையும் முன்வந்து விசாரிக்கிறது.

எல்லாம் மாயை என்று ரிஷிகேஷ் (யார் அந்த தூயமுனி?) முனிவர் கூறினாலும் ஒரு ஹோட்டலில் உணவருந்தி அதையே சொல்லிவிட்டு வர முடியாதே?

பூஜ்யம் என்ற ஒன்றும் இல்லை என்பார்
ஜே. கிருஷ்ணமூர்த்தி. இலக்கங்கள் எப்படியோ இருக்கட்டும். அதன் மகிமையை நாம் உணரவோ ஏற்றுக்கொள்ளவோதான் வேண்டி இருக்கிறது.

God is the tangential point between zero and infinity என்று alfreed jerry சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

நகுலனின் கவிதையில் இருப்பதற்காக வருகிறோம், இல்லாமலேயே போகிறோம் கூட satire பூஜ்யம்தான்.

கவிதை காதலிக்கு எழுதியதுபோல் எனக்கு நானே எழுதி கொண்டதுதான். நான் யாருக்காக வாழ்கிறேன் என்பதும் எனக்காக யார் வாழ்கிறார்கள் என்பதும் யோசித்துப்பார்க்க பூஜ்ஜியம்தான் கிட்டும்.

கைகளை விரித்து காட்டிவிடலாம் ஒன்றும் இல்லை என்பதை அது சொல்லிவிடும். மனதில் ஒன்றும் இல்லை என்று சொல்ல முடியுமா?

உடலை பஞ்ச பூதமாக்கிய இந்திய தத்துவ மரபில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ஓரிரு புத்தகங்கள் வாசிக்க இன்னொரு பாதையும் புலப்படும்.

பூஜ்யம் எப்போதுமே ஆரம்பமாக இருப்பதை மறுக்க முடியாது அல்லவா?





சில துரோகம் தாங்க முடியவில்லை. அதுதான் கடும் சிக்கல்... 😊😊😊

மிக்க நன்றி வாசிப்புக்கு....

இப்படி எழுதியே எனக்கு பழக்கம் ஆகி விட்டது. இதுவும் தமிழுக்கு அழகும் பொருளும் சேர்த்தால் நல்லது என்றுதான் தோன்றுகிறது. உங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றிகள்

லேசாய் பட்டி டிங்கரிங் பார்த்தால் ஹைக்கூ ஆக நிறைய வாய்ப்புகள் உண்டே....

நான் பல சிக்கல்கள் காரணமாக வருவது இல்லை. மன்னிக்கவும். சென்ற பதிவும் பார்க்கவில்லை.
இது கணவனுக்கு தெரியாத மொபைல் காதல் என்று கற்பனை செய்ய அர்த்தம் கூடும்.
கூட்டுக்குடும்பத்தில் கூட இந்த சிக்கல் உண்டு.
எப்படியோ சிக்கல்கள் மட்டுமே வாழ்வை நகர்த்துகிறது....
நீங்கள் நலம் என நம்புகிறேன். விரும்புவதும் அதுவே

Fair and lovely பெயர் மாறி போனது தெரியாதோ பாட்டிக்கு? அவாத்து குழந்தை சொல்ல மறந்ததோ?🤣🤣🤣

வாசிப்புக்கு மகிழ்ச்சியும் அன்பும் நண்பர்...

உருவகம்தானே... அவர் எங்கு வேண்டுமானாலும் சுற்றி திரியட்டும். நீங்கள் நலமா... எல்லா வாசிப்புக்கு இடையிலும் உங்கள் நினைவு வரும். மறந்தேன் என்று நினைக்க வேண்டாம்.
கொல்லும் காலத்தில் நான்...

தங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றிகள். புரியாத ஒன்றுதான் உங்கள் அனுபவத்தின் மொழி இல்லாத பகுதிகள். காலப்போக்கில் அர்த்தம் திரளும்.

மெல்ல விரியும் மலர்... நேர்நிறை? காசு? என்னவோ சொல்வார்கள் மறந்து விட்டது. இலக்கண குறிப்புக்கு அப்பால் ஓர் ராஜாங்கம் நிகழ்த்தி கொண்டிருக்கிறது பாடல்

ரவி வர்மன் எழுதிய ஓவியமா இஃது
கவின் மனச்சாரலின் காவியமா அன்றில்
புவி குளிர தீந்தமிழ்ப்பாவை மொழியில்
அவிழ்ந்திடும் நாணப் புயலிதுவோ?.

ஓரளவு நன்றாக இருக்கிறதா அன்பரே


ஸ்பரிசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே