மழை அறைகள்

உவப்பின் குறியீடுகளோடு
அடையாளமிட்ட கண்களால்
நீ உள்ளே செல்கிறாய்.

நடப்பதைக்கூட உன்
கால்கள் அறியாது இருக்க
நான் உன்னை தொடர்கிறேன்.

பழைய வீடு
பழைய அறை
எரியும் விளக்கொன்று இல்லை
ஆயினும், பழகிய அதே ஒளி.

சிகரத்தில் ஏறுவதுபோல்
எனக்கு தோன்றுகிறது.

தலையை பின்னே தள்ளி
என்னை பார்க்கிறாய்.
கருப்பு நிறத்தில் பிரா. உன்
பிங்க் நிற பிராவும் பிடிக்கும்.

ஏனோ ஒரு பெருமூச்சு.

இன்னும் ஒரு அறையை
கடந்ததும்...
அடுத்த அறையில்
அந்த மூலையில்
நீ எந்த கோணத்தில் நிற்பாய்
ஆடைகள் எப்படி நெகிழும்
என்பது எனக்கு தெரியும்.

பெரும் நூற்றாண்டுகள்
கடந்து செல்வதைபோல்
இருக்கிறது நாம் செல்வது.

எத்தனை ரகசியமானது.
உயிருக்குள் குருவிகள்
பறப்பதைப்போல் உணர்கிறேன்.

ஆடையை முழங்கால் வரை
உயர்த்தியபடி குனிந்து
அறைக்குள் செல்கிறாய்.

ஸ்விட்ச் போர்டு மேல்
ஒரு ஸ்பானர் இருக்கிறது.

கதவை மூடி ஸ்பானரை
பூட்டுக்கு பதில் செருகிவைத்து
என்னை பார்க்கிறாய்.

இன்னிக்கு...
வேற மாதிரி செய்வோம்
என்றதும் குழப்பமாகிறேன்.

வெளியில் யாரோ
நடமாடுவதும் பேசுவதும்
நமக்கு கேட்கிறது.

தினுசான நடமாட்ட ஒலிகள்
காமத்தை பிறாண்டி விடும்.

ஆகவே வேண்டாம் என்று
இருவரும் முடிவு செய்கிறோம்.

ஸ்பானரை உருவுகிறாய்.

குளிர்ந்த எலும்புத்துண்டாக
அது கனக்கிறது என்கிறாய்.

கதவு திறக்கவும்
காற்று மோதிட நமது
மூச்சின் வேகம் மாறுகிறது.

கதவுக்கு பின்னே நான்
நிற்க...
யாருமே இல்லையே என்று
நான் சொல்லி முடிக்குமுன்
நம்
இதழ்கள் பின்னிக்கொண்டன.

இன்று பிள்ளையார் சதுர்த்தி
என்றாலும்
நீ பிள்ளையார் இல்லையே என்று
ஆறுதல் கூறியபடியே
மேலே நசுங்க இடித்து
கீழே துளைத்து முட்டவும்...

சில காலைகள் மட்டும்
உஷ்ணத்தில்தான் மழையாகிறது.

எழுதியவர் : ஸ்பரிசன் (31-Aug-22, 9:42 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : mazhai araikal
பார்வை : 130

மேலே