பூஜ்யத்தின் நிழல்

ஒவ்வொரு நாளும்
நீயாக வந்து
அவளாக கடந்து

தீயாக மோகமூட்டி
திரியாக எரிய வைத்து
மழையாக மாறி அவித்து

குத்தும் கூர்வேல்
சொல்லேந்தி ஊன் அவித்து
மரணமாய் புன்னகைத்து

மனமெங்கும் அரவமாய்
விடமூட்டி குளிர் காய்ந்து
பகை கொடுத்து விலகி

சொட்டு சொட்டாக
சேர்த்த உயிர் இதனில்
துயர் விதைத்து துயிலின்
நினைவொழித்து கடந்து

பாலை என்றானதும்
ஞானம் விதைத்து
இறப்பின் நாள் குறித்து

கலைந்து போகிறாய்
காற்றுக்குள் சிதறிய
பூஜ்யத்தின் நிழல்களை
உன் உயிரில் நிரப்பி.

எழுதியவர் : ஸ்பரிசன் (30-Aug-22, 11:47 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 133

மேலே