சப்தத்தின் சாரல்

நான் என்னை
நம்புவதற்கு சில சமயம்...

நீண்டதூரம் நடக்கவோ
எனக்குள் ஏதேனும் பாடவோ
மெள்ள சிரிக்கவோ
முன்முடியை ஒதுக்கவோ
செடியொன்று நடவோ...

என்னை நான்
நம்புவதற்கு சில சமயம்...

வான நுனியில் மிதந்து
இசைத்துளியில் சிதறி
பூக்களில் ஈரமாய் துளிர்த்து
கண்ணோரம் மிதக்கும்
காற்றுக்குள் ஒளியென படர்ந்து
மோனலிஸாவின் மூச்சில்
மின்னலை ஊன்றியபடி....

நீண்டதோர் மறதியில்
என்னை ரகசியமாய்
நம்புகிறேன் என்பதால்தான்...

குளிரில் கூடு கட்டி
மீன்களின் கனவில்
பூக்களை விதைத்து
ஆகாயத்தை நெய்கிறேன்.

நம்பிக்கைதான்...

சாளரம் மூடி அதன்
சாளரம் திறக்கும் சாவி.


===================________========

எழுதியவர் : ஸ்பரிசன் (4-Jun-21, 6:39 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே