தாயைப் போலலல்லவா
மானுட மேனியை
மூடி மறைக்க ஆடைகள்,
உள்ளுறுப்புகளை காக்கும்
உடலின் கவசம் தேகம்--இது
மானுடப் போர்வை
மரியாதைக் குரியது
அத்து மீறும்
அவயவங்களால்—தேகம்
அடி, உதை வாங்கும்
இரத்தம் காட்சி தரும்
பெய்யும் மழையாலும்
பெரும் அவதிக்குள்ளாகும்
சூரியப் பார்வையால்
சூடேறும் தேகம்
கடும் உழைப்பாலும்
கண்ணீர் சிந்தும்
பொத்தி, பொத்தி காக்கும் தேகம்
பெத்தத் தாயைப் போலல்லவா !