ஒரு தெருவோரக் காதல்

காலை நேரம்
வீதியை பெருக்கி
கழுவிக் கொண்டிருந்தான்
சோலை
"என்ன காலங் காத்தால
மந்திரி வாராகளா " என்றாள்
"ஆமா சுந்தரி நீ வாரேயிலே
அதான் " என்றான் சோலை
"என்ன கிண்டலா ...
கொஞ்சம் கைல தண்ணி ஊத்து "
என்றாள் அஞ்சலை
"எதுக்கு பல் தேச்சு குளிக்கவா "
ன்னு டயூப்பினால் தண்ணி விட்டான்
"ஆமா பிச்சை எடுக்குற பொழைப்புக்கு
பல் தேச்சு சீவி முடிச்சு சிங்காரிச்சுகிட்டு
நிக்கனமாக்கும்
ஏய் ஏய் நிறுத்து ஒடம்பெல்லாம்
நனைச்சுப் புட்டியே சீ "
"அட கோயிச்சுகாத அஞ்சலை
ட்யூப் திரும்பிடிச்சு நா என்ன செய்வேன்
அந்தா பாரு அங்க பையில புது சேலை எல்லாம்
எடுத்து வச்சிருக்கேன் மரத்துக்குப் பின்னாடி போய்
உடுத்திக்கிட்டு வா "
"எனக்கா ?"
"ஆமா பின்ன யாருக்கு ?"
"இதுக்குத்தான் நனைச்சியா ?"
" அட நீ ஒன்னு உன்ன நெனைச்சேன்
எடுத்தாந்தேன் "

புதுச் சேலை கட்டி ஒய்யாரமாய்
நடந்து வந்தாள் அஞ்சலை
அப்படியே அவளை அசந்து
பார்த்து நின்றான் சோலை
"என்ன அப்படிப் பாக்குற என்ன பிடிச்சிருக்கா
உனக்கு "
" அத சொல்லித்தான் தெரியனமாக்கும் "

இந்த தேசத்தின் வீதியை பெருக்குகிறேன்
திக்கற்ற இவள் அவல விதியை மாற்றுகிறேன்

"என்ன இது சினிமா பாட்டா ஒன்னும் புரியலியே!"
"ஓம் பாட்டுதான் வா போலாம் "
"எங்க கூப்புடுத சினிமாவுக்கா ?"
"சினிமா சினிமா... காலங் காத்தால எவன்
உனக்கு சினிமா காட்டுதான் அதெல்லாம்
சாயங்காலம் வச்ச்கிடலாம்
டீக் கடையில போய் டீயும் ரொட்டியும்
சாப்புடலாம்
மாறிப்போன காலைப் பொழுதில் விதியின்
புதிய வீதியில் புதிய உற்சாகத்துடன் அஞ்சலை
சோலையுடன் கைகோர்த்து நடந்தாள்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-12, 12:23 am)
பார்வை : 1016

மேலே