ஆதிகாதல்

மலர்களின் உரசல்கள் விளைத்த பூகம்பம்
பறவைகள் மிதித்தபோது கசங்கிய பாறை
வரிசை எறும்புகள் மீது
மலைகளை தழுவிய காற்று நிகழ்த்திய
வன்போர் காதல்...

புதுவெளியின் பெருவெளிச்சம்
ஆதி மரத்தின் நிழலில் உதித்த உயிர்...
உலகின் முதல்மழை காதல்...

வனங்களில் எச்சமிடும் பறவை
மலர்களில் முயங்கும் வண்டு
இயற்கையின் புணர்ச்சி காதல்...

-வித்யா சிவலிங்கம்

எழுதியவர் : (23-Feb-18, 6:28 pm)
பார்வை : 99

மேலே