விதை

நீங்கள் எமக்களித்த விதையது;
அதை சுதந்திரமென்றும் எமது அடையாளமென்றும்
மொழிந்தீர்கள்;
நீங்கள் அந்த விதையின்மேல் மழையென பொழிந்தீர்கள்;
அவ்விதை இன்று
துளிர்த்து,
கிளைத்து
விருட்சமென வேரூன்றி
விரிந்து நிற்கிறது...
இப்போது நீங்கள் அதன் கிளைகளை அகற்றி இலைகளை கத்தரித்து எல்லைகளை வரையறுத்து தருகிறீர்கள்...

எழுதியவர் : (23-Feb-18, 6:31 pm)
Tanglish : vaithai
பார்வை : 89

மேலே