கிளர்ந்து எழு
நல்லோர் வாய் திறவா தெனில்
நலம் இங்கு பிறவாது!
சொல்லால் இனிஒரு போர் செய்
மௌனம் அது உதவாது!
தீயோன் துணிவாக ஓர் இழி
செயல் செய துணிந்தால்,
தூயோன் தலை நிமிர்ந்து மனம் துடித்து
எரித்தல் அதை வேண்டும்!
விழி கண்டும் கொடு வினைகள்
வழி ஒதுக்கி போனால்,
பழி எல்லாம் உன்னில் தான்
விழித் தெழுந்து வாடா!
கரம் உயர்த்து குரல் முழங்கு
மறம் நெஞ்சில் இருக்க...
புறம் ஒதுக்கும் முறை ஒடுக்கு
அறம் மண்ணில் செழிக்க!