காமம் வந்ததா முதலில் காதல் வந்ததா

காமம் வந்ததா? முதலில் காதல் வந்ததா?
அறிவில் வந்ததா? இல்லை மனதில் வந்ததா?

அப்பழுக்கானது என்று சொல்லும் பெருமை பெற்றதா?
அனைத்துயிரும் அறிந்து கொள்ளும் நடுமையானதா?

உரிய போது உயிரை காக்கும் உன்னதமானதா?
ஒருதலையாய் உரிமை கோரி உயிரை கொல்வதா?

செல்வம் உள்ள மனிதருக்குள் சேர முடியாததா?
சினங்கொண்டு கவர்ந்து வந்து சேர முயல்வதா?

கனந்தோறும் மனமதனை பிதற்றச் செய்வதா?
கணக்கற்று எதிர்பாலினத்தை சிதைக்கத் துணிவதா?

பிணக்கு வர சுரக்க வைக்கும் காமக் காதலை
பிறக்கும் உயிருக்கு காட்டாமல் விரட்டி அடித்திடுவோம்.
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-May-19, 9:54 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 229
மேலே