சோமனவன் தாக்கத்தில்

சோமனவன் தாக்கத்தில்
*******************************************

மாமரக் குயிலேயென் மாமரக் குயிலே
மாமன்வரக் காத்திருக்கும் மாமரக் குயிலே
தாமதமேன் என்றென்னைக் கேட்காதே பூங்குயிலே --நீ
ஏமாந்து போகாது வந்தேனே இப்போது
சாமநேரம் பாதியேக காமபாணம் நாணிலேறி
சோமனவன் தாக்கத்தில் சேமநிலை கோருதடி !
பாமரனின் குற்றந்தனை சிறிதேனும் மன்னித்து
நாமிருவர் சேர்தற்கு மனமொன்றி ஒத்துழைப்பாய் !

எழுதியவர் : சக்கரைவாசன் (4-Jul-19, 9:30 am)
பார்வை : 177

மேலே