உன்னை மறப்பனோ

உடல் உணர்வை மறக்குமோ
கடல் உவர்ப்பை மறக்குமோ
காலம் மாற்றத்தை மறக்குமோ
கோலம் வாசலை மறக்குமோ
ஞானம் நிலையாமையை மறக்குமோ
மௌனம் அமைதியை மறக்குமோ
மீன் நீரை மறக்குமோ
தேன் இனிப்பை மறக்குமோ
நான் உன்னையும் மறப்பனோ

எழுதியவர் : வெங்கடேசன் (28-Mar-22, 4:59 am)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 209

மேலே