வெங்கடேசன்- கருத்துகள்

(உன் பூவிதழ் சிந்தும் புன்னகை ) எண்ணி ரசிக்கின்றேன் .அருமை அய்யா ..

"சோமனவன் தாக்கத்தில் சேமநிலை கோருதடி ! " என்ற வரிகள் அருமை அய்யா ..

காதல் சொட்டும் பாடல்... அருமை அய்யா..

அருமை கவிதை ...பகவான் ரமணர் அணைத்து கேள்விகளுக்கும் ஒரே விடையை கேள்வியாக தந்துள்ளார் ..." நான் யார் என்ற கேள்வி "

பெரும்பாலும் கவிதையில் சிவப்பு நிற பெண்ணையே எழுதுகின்றனர் அனால் நீங்கள் "கண்ணங்கருமைக் கொண்ட காவியச் சிலையோ" என்பது மிக்க அருமை ...

"தவிக்கின்ற என் உள்ளக் கூட்டின் தலைவியும் நீயே
தாரமாக வந்திட நீ சம்மதிப்பாயோ" அருமை ....தவறாக அழைக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது ...

"நாணல் போன்ற உருவத்தோடே நகர்கின்றவனே
நண்டைக் கண்டால் ஓடி சென்று ஒளிந்து கொண்டாயே
பெண்ணின் மேலே ஆசை வந்தால் துணிவு வரணுமே
பெரிதாக உழைக்க உடலில் உறுதி கொள்ளணுமே" உடலும் உள்ளமும் உறுதி வேண்டும் என்பது அவளின் ஆசையாக சொல்லுவது மிக்க அழகு ..

நல்ல கருத்துக்களை உரைக்கும் அண்ணாவிற்கு மிக்க நன்றி ..வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் ..

அருமையான பாடல் ...அழகனை நினைக்கும் தோறும் பண்ணும் பட்டும் ஊறும்

அருமை அய்யா ..ஆனான் உவமை எல்லாம் பழையதே..

"மதிதன்னில் ஆறே அலைவதால் மாந்தர்
மதிஎன்றும் ஆறா தலைகிறதோ ?" மிக்க அருமை அய்யா ....மனனம் செய்து கொள்கிறேன் அய்யா ...

தங்கள் எழுத்து என்றும் தனி அழகு

வாசன் அய்யாவின் பாடலுக்கு தங்கள் அளித்த பாடல் அருமை அய்யா

அய்யா தங்கள் கவிக்கு ஈடு இணை இல்லை....கவியோகி சுத்தானந்த பாரதியின் "எப்படி பாடினாரோ அடியார் " என்ற பாடல் நினைவுக்கு வருகிறது .

அருமை அய்யா...சிறு சந்தேகம் மெய் களைந்தாள் மனதுக்கு சற்று ஒய்வு உண்டா அய்யா .

அருமை அய்யா ..சொல்லும் பொருளும் இனிமை ..எனக்கும் புரியும் அளவுக்கு எழுதுகின்றிர்கள் ..நன்றி ..

அய்யா எழுத்து பிழையாக எனக்கும் என எழுதிவிட்டேன் ..எனக்கு மட்டும் என்பதே எண்ணியது

அய்யா தங்கள் பாடல் தேன்...தங்கள் பாடலை நான் இப்படி இப்படி எழுதி பார்க்கிறேன் ..எனக்கும் எந்த இலக்கணமும் தெரியாது ..சினம் கொள்ளல் வேண்டாம்.

"மனையினை மதுவினை சீனமொடு கள்ளை
அணைக்கரம் தொட்டணைத் தென்பெற்றாய் மனமே?
கணையோடு கோதண்டம் கொண்டானின் பாதத்தை
வினையோடும் வரை வணங்கு"

என்னே அழுகு தமிழின் இனிமை ..நடையும் பொருளும் அருமை அய்யா ...இயல்பான வெண்பா ..எளிமையான மொழி அய்யா ..

"முன்முடுக்கி பின்னிருப்பான் அவன்" சாட்டையில் பம்பரம் போல் நம்மை இயக்கும் இறை என இயம்பியது இனிமை ..

தங்கள் உரைத்தது முழுதும் உண்மை அய்யா ..ஆம் அய்யா ..மொழி பற்றும் ..தேசப்பற்றும் குறைந்து ... கொள்ளையில் முளைக்கின்றது கல்வி...
"நாட்டின் மேல் அக்கறை இன்றி
அக்கரை நாட்டின் வங்கியில்
பொருள் சேர்ப்பதே அரசியல்" என மாறிவிட்டது நிர்வாகத்தின் நெஞ்சம்...

இந்தி திணிப்பு இருளை சேர்கின்றது ..கிராமத்தில் உள்ள அரசு பள்ளியிலும் ஆங்கில வழி கல்வி ..மகாத்மா சொன்ன தாய்மொழி வழி கொள்கை செத்துப்போய்விட்டது ..ssc , upsc prelims , போன்ற தேர்வுகளில் மாநில மொழியின்றி திண்டாட்டம்..பணம் படைத்த பெற்றோர்களும் இப்போது தங்கள் பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைக்க அரமித்துவிட்டனர்...பன்முக கலாச்சாரம் கொண்ட பழம்பெரும் பாரதம் ..அயலாரின் நடைமுறையை பின்பற்றி சுயத்தன்மை இழக்கின்றனர்...தேச பாசம் இன்மையால் வளங்கள் அள்ளுவதில் வரம்பு இல்லாமல் போய்விட்டது ...


வெங்கடேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே