நடிகர் சங்கத் தேர்தல்

வேண்டும் இந்தத் தேர்தல் வேண்டும் ஐயா
பல வேதனையைப் போக்கிடும் தேர்தல் இது

நாட்டில் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து விடும்
சேற்றில் நெல் நடவை நட்டு விடும்

காசின் மதிப்பை நாளும் கூட்டிவிடும்
கடுகாய் நம் பிரச்சனையைக் குறைத்து விடும்

வேலை வாய்ப்பை பல நூறாய் கொடுத்திடும்
வெண்மைப் புரட்சிக்கு நம்மை இட்டு செல்லும்

மூன்றாண்டுக்கு ஒரு முறை என்பதை மாற்றினால்
முப்போக விளைச்சல் பெற்று முன்னேறலாம்

வெள்ளைத் திரையில் வித்தைக் காட்டுவோர்கிடையே
வெட்டியாய் நடக்கும் விளம்பர நிகழ்வே இது.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Jun-19, 8:26 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 44

மேலே