ஐந்தெழுத்து இந்தியா

இருள் சூழ்ந்த இந்தியா...
இதுதான் டிஜிட்டல் இந்தியாவோjQuery17103033655346568289_1561371599485?
சுதந்திரம் வாங்கப்படவில்லை
பரிக்கப்பட்டு விட்டது...
அதிக கற்பலிப்பு நடைபெறும் நாடுகளில்
முதலிடம் பிடிக்கவா நினைக்கிறது...!
நம் ஜனநாயக நாடு...
ஒன்பது மாத குழந்தைக்கு
என்ன தெரியும்..?
ஏன் இந்த நிலையை போக்காமல் நிற்கிறது?
நம் ஜனநாயக நாடு!
தன்தாயின் மடியிலே உறங்கும் ஒருஜீவன்
மண்தாயின் மடியிலே கிடக்கிறது!
அய்யோ ....
புழுக்களும் பூச்சிகளும் கடிக்குமோ?
பதறுகிறது நெஞ்சம்...!
மனித பூச்சி கடித்ததைவிடவா?
புழு பூச்சிகள் கடிப்பது வலிக்கும்!!
மனிதர்கள் மனிதர்களாக இல்லை
மனிதர்கள் மிருகங்களாகவே வாழ்கின்றனர்..
இவ்வுலகில்...
ஆம்...
கற்பழிப்பு செய்தவன் மட்டும் மிருகமல்ல...
அதனை கண்டும் காணாமலும் நிற்கும்
நாமும்கூட மிருகம் தான்!
தவறு செய்தவனை தண்டிக்காமல்
சிவாரிசு என்ற பெயரில் ...
வெளியில் விடும் ...
இந்த அரசாங்கம் கூட மிருக அரசாங்கம் தான்!!

எழுதியவர் : H.S.Hameed (24-Jun-19, 3:48 pm)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 80

மேலே