ஆட்சி எல்லை வரை உனக்கு சொந்தம்

உரிமையைக் கேள் உரிமையைக் கேள்
உனக்கான முழு உரிமையைக் கேள்
பிறந்து விட்டாய் இந்தியப் பிள்ளையாய்
ஆட்சி எல்லை வரை உனக்கு சொந்தம்

அச்சப்படாதே அணுவளவும் அச்சப்படாதே
பிச்சையெடுத்து உண்ண வேண்டிய நிலையில்லை
எட்டுத்திக்கும் வளம் நிறைந்தது நம் நாடு
உனக்கானதை நாட்டை ஆளுவோரிடம் கேளு

வாக்கிட மட்டும் பிறக்கவில்லை நாம்
வாழ்க்கை செழித்து நாடு வளம் பெறவே நம் பிறப்பு
வழியில் யார் வம்பிழப்புணும் வன்மையாய் எதிர்
எப்போதும் அம்பாய் இருக்கட்டும் உன் இலக்கு

படித்தவன் நாட்டில் பெருக பெருக - எவ்வழியிலேனும்
நவ வகை துன்பம் நம்மை சூழும் என்பதே உண்மை
வார்த்தை சூழ்ச்சிக்கு மயங்கி வாழ்வை மாற்றாதே
அரசியல் என்பது அறிஞர்களின் சூழ்ச்சியே அறி.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Jun-19, 7:50 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 66

மேலே