இருவரின் இன்பத்தில் உருவானாய்

இருட்டோ பகலோ ஒரு உறவில்
இருவரின் இன்பத்தில் உருவானாய்
துயரோ மகிழ்வோ தொடரும் வலியோ
தொல்லைத் தரும் என நினையாமல் பிறந்தாய்

அழுதாலும் ஆழ்ந்து வருத்தமுற்றாலும்
அண்டியத் துன்பம் அகலாது என்று அறியாமல்
அணுவணுவாய் துடித்து அழுது புரண்டாய்
பழத்த பழம் விழுவதைப் போல் துன்பம் விலகியதறிந்தாய்

பல வேறு நிலைகளில் பயந்து பயந்து துடித்து
பழகி பழகி தெளிந்து பலவானாய் பரிணமித்தாய்
பட்ட மரம் போல் விக்கித்த தருணங்களால்
பெற்ற அறிவால் சிட்டாய் சிறகடித்து எழுந்தாய்
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Jun-19, 8:17 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 803

மேலே