வித்தியாச இரவு

கும்பலாய் அமர்ந்து
குழுவாய் கலந்து பேசி
இயற்கையோடு இணைந்த
இனிய இரவு அன்று.
தனி அறையில் அடைந்து
செல்லின் செயலியில்
குழுவை பகிர்ந்து
இணையத்துடன் புதைந்த
இரவு இன்று
விதியின் மாற்றம் அல்ல
விதியை ஏமாற்றும் மனித மாற்றம்
உணர்கிறேன் இரவு வீதியில்
விதியை நினைந்து.....

எழுதியவர் : ராஜா ,த (25-Jun-19, 4:40 am)
சேர்த்தது : ராஜா த
Tanglish : vithyaasa iravu
பார்வை : 85

மேலே